Local

இலங்கையில் பிரதமர் பதவியில் மாற்றம் வருமா?

பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், பிரதமர் பதவியை மாற்றத் தயாராக இருப்பதாகவும் பரப்பப்படும் செய்தி பொய்யானது என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இது எதிர்க்கட்சியினரால் புனையப்பட்ட கதை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொஹொட்டுவவில் பிளவு இல்லை எனவும், இது தொடர்பில் பரப்பப்படும் பரப்புரை பொய்யானது எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டுக்கு தேவையான தீர்மானத்தை பொஹொட்டுவ எடுக்கும் எனவும் வலியுறுத்தினார்.

பரோபகார அரசியல்வாதியான மறைந்த ரெஜி ரணதுங்கவின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading