Daraz Sri Lanka நிறுவனம் Brand Offers, Vouchers மற்றும் கொடுப்பனவுக் Payment Partner சேமிப்புகளுடன் 10.10 Shopping Fest ஊக்குவிப்பு நிகழ்வைத் தொடங்குகிறது
ஒக்டோபர் 9 முதல் 16 வரை நடைபெறும் இந்த ஊக்குவிப்புத்திட்டம், Brand Rush Hour, நேரடித் தள்ளுபடிகள், Mega Deals, Hot Picks மற்றும் குறிப்பிட்ட வங்கிகள் மூலம் தவணை முறைக் கொடுப்பனவு வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குகிறது.
Daraz Sri Lanka தனது 10.10 Shopping Fest ஊக்குவிப்பு நிகழ்வை அறிமுகப்படுத்தவுள்ளது. இது இலத்திரனியல் சாதனங்கள், நவநாகரிகம், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைகள் எனப் பலவற்றிலும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. ஒக்டோபர் 9 அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி ஒக்டோபர் 16 வரை நடைபெறும் இத்திட்டம், வர்த்தகநாமச் சலுகைகள், வவுச்சர்கள் மற்றும் பங்கேற்கும் கொடுப்பனவுச் சேவைப் பங்காளர்கள் மூலமான கூடுதல் சேமிப்பு வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டை மேம்படுத்தவோ, ஆடைத் தொகுப்பைப் புதுப்பிக்கவோ அல்லது வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளவோ விரும்பினாலும், இந்த Shopping Fest பல்வேறு தேவைகள் மற்றும் பட்ஜெட்டுகளுக்கு ஏற்ற பலவிதமான தேர்வுகளை வழங்கும்.
Celcius, Diamond, Anker, Aspor, Himalaya, Hemas, Unilever மற்றும் Natures Beauty ஆகியவை இதில் பங்கேற்கும் வர்த்தகநாமங்களில் அடங்கும். மேலும், Sharge, Tronsmart, Janet, COSRX, NutriMax Supplements, Herbal Bliss LK, Swisstek, Quantum Fitness, Moose, Amante மற்றும் ProMate ஆகியவற்றின் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் ஆராய்ந்து பயன்பெறலாம்.
இந்த ஊக்குவிப்புத்திட்டம் Brand Rush Hour நிகழ்வுடன் தொடங்குகிறது. இது ஒக்டோபர் 9 இரவு 8 மணி முதல் ஒக்டோபர் 10 அதிகாலை 2 மணி வரை நடைபெறும். இந்த ஆறு மணி நேர இடைவெளியில், வாடிக்கையாளர்கள் குறுகிய காலச் சலுகைகளைப் பெறலாம். அத்துடன், தகுதியான கொள்வனவுகளுக்கு KOKO மூலம் கூடுதல் 25% தள்ளுபடியையோ அல்லது பங்கேற்கும் வங்கிகளின் மூலம் கூடுதல் 20% தள்ளுபடியையோ பெறலாம்.
இதில் பங்கேற்கும் வங்கி மற்றும் நிதிசார் கூட்டாளர்களில் இலங்கை வங்கி, கார்கில்ஸ் வங்கி, கொமர்ஷல் வங்கி, LOLC Finance, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, சம்பத் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவை அடங்கும்.
Brand Rush Hour நிகழ்வைத் தொடர்ந்து, ஒக்டோபர் 16 வரை நடைபெறும் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் போது, KOKO மூலம் கூடுதல் 12% தள்ளுபடியையோ அல்லது வங்கிகள் வழங்கும் 10% முதல் 15% வரையிலான தள்ளுபடிகளையோ வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பெறலாம். தள்ளுபடி வீதங்கள் மற்றும் சலுகைக் காலங்கள் ஒவ்வொரு கூட்டாளருக்கும் ஏற்ப மாறுபடும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலான தவணை முறை கொடுப்பனவு வசதிகளும் வழங்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள அட்டைதாரர்கள் தங்கள் கொள்வனவுச் செலவைச் சிறு தொகை கொண்ட தவணைகளாகச் செலுத்த முடியும். இதற்கான கால அவகாசம் மற்றும் தகுதி ஆகியவை அந்தந்த வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.
இந்த ஊக்குவிப்புத்திட்டத்தின் முழு காலப்பகுதியிலும், வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான Mega Deals, Hot Picks மற்றும் Flat Discounts ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். Daraz Mall ஆனது உத்தியோகபூர்வ வர்த்தகநாம விற்பனை மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை ஒன்றிணைப்பதன் மூலம், பல்வேறு வகைகளைச் சேர்ந்த வர்த்தகநாமம் கொண்ட தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
விற்பனை நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாகவே, கிடைக்கக்கூடிய வவுச்சர்களைச் சேகரித்துக்கொள்ளவும், தங்களுக்கு விருப்பமான தயாரிப்புகளைத் தங்கள் கொள்வனவுக் கூடைகளில் சேர்த்துக்கொள்ளவும் வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். Daraz 10.10 Shopping Fest நிகழ்வானது, 2026 ஒக்டோபர் 9 இரவு 8 மணி முதல் ஒக்டோபர் 16 வரை Daraz app மற்றும் www.daraz.lk இணையத்தளத்தில் நடைபெறும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. சலுகைகள் தகுதி, குறைந்தபட்ச செலவுத் தேவைப்பாடுகள், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள், கூட்டாளர் நிபந்தனைகள் மற்றும் கையிருப்பு நிலவரம் ஆகியவற்றிற்கு உட்பட்டவை.
Daraz குழுமம் தொடர்பான விபரங்கள்
Daraz என்பது பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் செயல்படும் முன்னணி மின்-வணிக (e-commerce) தளமாகும். 500 மில்லியன் மக்கள் வசிக்கும் வேகமாக வளர்ந்து வரும் இப்பிராந்தியத்தில், அதிநவீன சந்தை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரை இது வலுப்படுத்துகிறது. மின்-வணிகம், விநியோக ஏற்பாட்டியல், கொடுப்பனவு மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், சிறப்பான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்குவதையும், வணிகத்தின் ஆற்றல் மூலம் தெற்காசிய சமூகங்களை மேம்படுத்துவதையும் இந்நிறுவனம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் தகவல் விபரங்களுக்கு, www.daraz.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது நிறுவனத்தின் வழக்கமான அறிவிப்புகளைப் பெற LinkedIn-இல் Daraz-ஐப் பின்தொடரவும்.

You must be logged in to post a comment.