Local

இலங்கையில் புதிதாக பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை!

நாட்டில் தற்போது கண்டறியப்படாத புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன பொது மக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

கோவிட் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு மேலதிகமாக குறித்த வைரஸ் தற்போது அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தற்போது பல பகுதிகளில் கட்டுமானப் பணியிடங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் கண்டறியப்படும் நிலையில், மக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading