Local

இலங்கையில் பேருந்து விபத்து ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம் | Three Buses Accident A9 Road

அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் குறித்த பேருந்துகளில் ஒன்றைய மோதியதில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம் | Three Buses Accident A9 Road

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading