பூமிக்கு அடியில் எறும்புகள் கட்டிய 40 டன் ‘AC மெகா சிட்டி
‘
“எறும்பு ஊர கல்லும் தேயும்”னு சும்மாவா சொன்னாங்க நம்ம பாட்டன்? அந்த சின்ன எறும்பு பூமிக்கு அடியில் ஒரு மாநகரத்தையே கட்டி வச்சிருக்கு தெரியுமா?
நடந்தது என்ன?
பிரேசிலில் இருக்கும் செர்ராடோ அடர்ந்த காடு. அங்கே இலை வெட்டும் எறும்புகள் கைவிட்டு போன ஒரு பழைய புற்று இருந்திருக்கு.
அதுக்குள்ள என்ன இருக்குனு பார்க்க பேராசிரியர் லூயிஸ் கார்லோஸ் ஃபோர்டி தலைமையிலான டீம் ஒரு பைத்தியக்காரத்தனமான ஐடியா பண்ணாங்க.
அந்த புற்றின் சின்ன ஓட்டைக்குள் 10,000 கிலோ (10 டன்) சிமெண்ட் கலவையை திரவமா ஊற்றினாங்க!
10 நாள் கழிச்சு சிமெண்ட் காய்ஞ்சதும், சுத்தி இருந்த மண்ணை தோண்டி எடுத்தா… விஞ்ஞானிகளுக்கே கண்ணு தெறிச்சிடுச்சு!
அங்கே என்ன இருந்துச்சு தெரியுமா?
1. பிரம்மாண்ட அளவு: 500 சதுர அடி பரப்பளவு, 26 அடி ஆழம்! இது ஒரு புற்று இல்ல, ஒரு பாதாள கோட்டை!
2. 40 டன் மண்: இதை கட்ட அந்த குட்டி எறும்புகள் 40 டன் மண்ணை வாயால் கடிச்சு, கடிச்சு வெளியே தூக்கி போட்டிருக்கு. இது சீனப் பெருஞ்சுவர் கட்டுனதுக்கு சமமான உழைப்பு!
3. ஸ்மார்ட் சிட்டி டிசைன்:
– பூஞ்சை வளர்க்க தனி AC Bedroom
– குப்பை போட தனி கழிவறை
– இலைகளை கொண்டு போக அகலமான Highway சுரங்கம்
– மேலே இருந்து மண் விழாம இருக்க துல்லியமான Engineering!
மனுஷங்க கூட இப்படி பிளான் பண்ணி வீடு கட்ட மாட்டாங்க! சின்ன உயிர், ஆனா பெரிய மூளை!
இதை பார்த்தா ஏலியன் நகரம்னு தான் சொல்ல தோணும்!

You must be logged in to post a comment.