ஒரே நாளில் 500 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த உக்ரைன்
russia reports 535 ukrainian soldiers killed: போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைனிய படைகள் கடுமையான இழப்புகளை சந்தித்து இருப்பதாகவும், ரஷ்ய படைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளின் தகவலில், ரஷ்யா முன்னெடுத்த தாக்குதலில் 535 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் அமெரிக்க தயாரிப்பான 2 HIMARS ராக்கெட்டுகள் மற்றும் உக்ரைனின் 680 ட்ரோன்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் Center படைப்பிரிவினர் நடத்திய தாக்குதலில் மட்டும் கிட்டத்தட்ட 335-க்கும் அதிகமான உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் East படையினர் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை உக்ரைன் இழந்து இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
தரைவழி தாக்குதல் மட்டுமின்றி ரஷ்யாவின் காமிகாசி ட்ரோன்களை பயன்படுத்தி உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.