Local

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் இனவாதம் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு!

இனவாதம் மீண்டும் தலைதூக்கவுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் இனவாதத்தை முன்னெடுக்குமாறு பல இனவாத குழுக்களை தூண்டுகின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்காரணமாக இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கொள்கைகள் மீண்டும் தலைதூக்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கு பதில்  அதற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் சமூக ஊடகங்களில் வெளியாகும் சிறிய கருத்துக்களால் கூட அரசாங்கம் குழப்பமடைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தலைதூக்கும் இனவாதத்தை மக்களால் மாத்திரம் தோற்கடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading