Local

இலங்கையில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம்?

இலங்கையில் முகக்கவசம் அணிவது தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னதாக மேற்கொண்டுள்ள தீர்மானம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. 

புதிய மாறுபாட்டுடனான கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றமை காரணமாக மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

குறைந்த பட்சம் கொரோனா அபாயம் அதிகமாக உள்ள பகுதிகளில் மாத்திரமேனும் உடனடியாக முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொடர்பில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் அது குறித்து அவதானம் செலுத்தப்படாமை கவலையளிப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading