இலங்கையில் வாகன விபத்தினால் பாதிக்கப்படுவோருக்கான நிதியுதவி அதிகரிப்பு
வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் சாரதிகளால் பாதிக்கப்படுவோருக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்க தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதனடிப்படையில், விபத்தில் உயிரிழப்போரின் தங்கிவாழ்வோருக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 2 இலட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 5 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச நிதியுதவி, 1 இலட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 3 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அதிகரிக்கப்பட்ட நிதியுதவித் திட்டம் 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள 011-269 6890 அல்லது 011-268 7109 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம் என அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.