Local

இலங்கையில் விமான விபத்து இருவர் உயிரிழப்பு!

இலங்கை விமானப்படையின் பயிற்ச்சி  விமானம் சீனக்குடா விமானப்படை தளத்தில் விபத்துக்குளானது.

சீனக்குடா இலங்கை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  இல 01 விமான பயிற்ச்சி  படைப்பிரிவிற்கு உரிய  PT -6 ரக விமானம்   விமான பரீட்சனைக்காக  இன்று முற்பகல் 11.25 மணிக்கு  சீனக்குடா விமான ஓடுபாதையில் பயணித்து  11:27 மணியளவில்  சீனக்குடா விமானப்படை தள பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை அறிவித்துள்ளது.

இதன்போது விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிர் இழந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால்  விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  விமானப்படை அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading