Local

இலங்கையில் வேகமாக Influenza virus பரவி வருவதாக எச்சரிக்கை!

இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த வைரஸ் காரணமாக சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்தார்.

குறித்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சலைக் காணலாம், எனவே எப்போதும் முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading