Local

இலங்கையில் ஹஜ் யாத்திரைக்கான விஷேட அறிவிப்பு!

2023 ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகைக்கான எந்தவொரு ஹஜ் முகவா்களையும் உத்தியோகபூர்வமாக இதுவரை தெரிவு செய்யவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் இசட் ஏ.எம் பைசால் தெரிவித்தார்.

எனவே 2023 ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்ற விரும்புவா்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை எந்தவொரு முகவர்களிடம் தங்களது கடவுச்சீட்டையோ முற்பணத்தையோ வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் திணைக்களத்தின் மேற்படி அறிவித்தலின்றி மேற்கொள்ளும் எவ்வித கொடுக்கல் வாங்கல்களுக்கும் திணைக்களம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது  என்பதையும் பணிப்பாளா் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading