Local

இலங்கையில் 16 இலட்சம் தொன் உணவு விரயமாவதாக தகவல்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 16 இலட்சம் தொன் உணவு விரயமாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 ஒரு வீட்டிலிருந்து வருடமொன்றுக்கு 76 கிலோ உணவு விரயமாகிறதென  ஐக்கிய நாடுகள் உணவு விரயச் சுட்டெண் தரவுகள் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், மாற்று உற்பத்திகளையும், புதிய உணவு இறுக்குமதிகளையும், தேடிக்கொண்டிருக்கும் போது, கிடைக்கும் உணவினை விரயமாக்காமல் பயன்படுத்தும் பொறுப்பினை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்று பொருண்மிய வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பு நகர சபையின் தரவுகளின்படி, கொழும்பில் அகற்றப்படும் திண்மக்கழிவுகளில் 64 வீதமானவை வீடுகள், உணவகங்கள் மற்றும் சந்தைகளிலிருந்து விரயமாக்கப்படுகின்ற உணவுகளே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு நாளும் இலங்கையில் சுமார் 7000 தொன் திண்மக்கழிவுகள் சேர்கின்றன. இவற்றில் 65 வீதமானவை உணவுக்கழிவுகளே என்று இன்னொரு தரவு கூறுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading