Local

இலங்கையில் 2 ஆவது அலைமூலம் 22484 பேருக்கு கொரோனா 116 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (03) 22 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 116 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம்  3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 19 ஆயிரத்து 400மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 15 ஆயிரத்து 624 பேர்வரை குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 628பேருக்கு வைரஸ் தொற்றியது.
அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 26 ஆயிரத்து 37பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில்  கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் ஐவர் உயிரிழந்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading