Local

இலங்கையில் 216 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் 216 மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை நூறாக குறைக்க முடியுமென வைத்தியர் சமன் ரத்னாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, உயிர்க்காப்பு மருந்துகளுக்கு தற்போது, எந்தவித தட்டுப்பாடும் இல்லை எனவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்னாயக்க உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading