இலங்கையில் LONGi தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகத்தராக E.B. Creasy Solar இணைவு
E.B. Creasy & Co., PLC இன் புதுப்பிக்கத்தக்க வலு பிரிவான E.B. Creasy Solar, இலங்கையில் LONGi தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற முகவராக நியமிக்கப்பட்டுள்ளது. சோலர் தொழினுட்பத்தில் உலகளாவிய ரீதியில் முன்னோடியாக திகழும் LONGi உடனான இந்தப் பங்காண்மையினூடாக, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுத் தீர்வுகளை மேம்படுத்துவதில் முக்கிய மைல்கல் எய்தப்பட்டுள்ளதுடன், நிலைபேறான எதிர்காலத்துக்கான வழிகோலப்பட்டுள்ளது. LONGi உடன் உத்தியோக விற்பனை பங்காளராக இணைந்துள்ள E.B. Creasy Solar, கொழும்பு மரீனோ பீச் ஹோட்டலில் நவம்பர் 29 ஆம் திகதி நடைபெற்ற அறிமுக நிகழ்வில் சோலர் பனெல்களை அறிமுகம் செய்திருந்தது.
இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு தற்போது உயர் வினைத்திறன், தங்கியிருக்கும் திறன் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றுக்காக அறியப்படும் LONGi இன் புகழ்பெற்ற சோலர் பனெல்களை கொள்வனவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால பங்காண்மைகளினூடாக, ஒப்பற்ற தரத்தில் நவீன தொழினுட்பத்தை ஏற்படுத்திக் கொடு்பபதில் E.B. Creasy Solar இன் அர்ப்பணிப்பு இந்தப் பங்காண்மையினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு வலுவூட்டி, நிலைபேறாண்மையை ஊக்குவித்து மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு இலங்கையை மாற்றும் பணிகளுக்கு ஆதரவளிப்பதில் E.B. Creasy Solar முன்னிலையில் திகழ்கின்றது.



You must be logged in to post a comment.