Local

இலங்கையை முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!

இலங்கையில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயண தடையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக உறுதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இராஜங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்குள் பஸ் சேவை வழமை போன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading