Local

இலங்கையை விட்டு வெளியேறும் நிலைபாட்டில் இளைஞர்கள்!

நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுடன் நேற்றைய தினம் காணொளி வழியாக நடத்திய பேச்சுவார்தையின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவரதன அரசியல், பொருளாதாரம், கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொழிநுட்பம் மற்றும் விவசாயம் என பல துறைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

இவரது ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் தொடர்கிறது. திறந்த பொருளாதார கொள்கையினையுடைய சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளன.

இந்நாடுகளில் அரச தலைவர்கள் மாற்றமடைந்துள்ளார்கள். ஆனால் பொருளாதார கொள்கை ஒருபோதும் மாற்றமடையவில்லை. ஆட்சி மாற்றம் பெறும் போது பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் ஒருபோதும் பொருளாதார ரீதியில் முன்னேற்றடைய முடியாது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் பெறும் போது பொருளாதார கொள்கையும் மாற்றமடைகிறது. இதுவே பொருளாதார பாதிப்பிற்கு பிரதான காரணியாக உள்ளது.

தற்போது அமுலில் உள்ள திறந்த பொருளாதார கொள்கையிலும் ஒரு சில மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. மட்டுப்பாடுகளை தளர்த்தினால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading