Sports

இலங்கை அணிக்கு அபார வெற்றி!

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதிக் கொண்டன.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்ப்பில் கார்த்திக் மெய்யப்பன் ஹெட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு 153 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 11 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading