Local

இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

மகத்தான வெற்றியுடன் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்து எமது கிரிக்கெட் அணி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் உயர்த்தி வைத்துள்ளது.

அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பால் இந்த சாதனைகள் உருவானது என்று ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்கள், நிர்வாகத்திற்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலையிலும், ஒற்றுமையுடன் தாய்நாட்டின் வெற்றிக்காக அனைவரும் செய்த பொதுவான அர்ப்பணிப்பு, கிரிக்கெட் உலகிற்கு மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, இந்த மகத்தான வெற்றிக்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading