Sports

இலங்கை அணி அபார வெற்றி – 107 ஓட்டங்களுக்குள் சுருண்டது அவுஸ்ரேலியா

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவத ஒருநாள் போட்டியில் இலங்கை அணி  அபார வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியா அணியை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  நான்கு விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் தனது 5ஆவது ஒருநாள் சர்வதேச சதத்துடன், 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். சரித்த அசலங்க 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

281 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி இலங்கையின் சுழல்பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது வெறும் 107 ஓட்டங்களுக்குள் சலக விக்கெட்டுகளை இழந்தது.

துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் சுமித் 29 ஓட்டங்களையும், ஜோஸ் இன்க்லீஸ் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் பெவிலியன் திரும்பினர்.

பந்துவீழ்ச்சில் துனித் வெல்லாளகே 4 விக்கெட்டுகளையும் வனிந்து அசரங்க, அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இலங்கை வெற்றிக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஒருநாள் தொடருக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்ரேலியா அணி 2 – 0 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading