LocalSports

இலங்கை இந்தியா இணைந்து நடத்தும் கிரிக்கெட் தொடர்!

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரை இலங்கை மற்றும் இந்திய அணிகள் இணைந்து நடாத்தவுள்ளன.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வ அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஐசிசி ரி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடாத்த ஐசிசி அனுமதி வழங்கி இருந்தது.

இதில், இலங்கை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட நிலையில் மேற்கிந்திய தீவுக்ள அணி கிண்ணத்தை கைப்பற்றி இருந்தது.

இதேவேளை, 2021 ரி20 உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்திருந்தது.

இம்முறை ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி முதன்முறையாக கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading