இலங்கை இனி முன்னோக்கிச் செல்லும்!


கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி விட்டார். இனி இலங்கை முன்னோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கிறேன்” என மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு கோட்டாபய புறப்பட்ட சில மணி நேரத்தில், தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
குறித்த ட்விட்டர் பதிவில், “இலங்கையிலேயே அவர் இருந்திருந்தால் உயிர் பயத்துடன் இருந்துகொண்டு அவரால் இராஜினாமா செய்திருக்க முடியாது. மாலைத்தீவு அரசாங்கம் சிந்தித்து எடுத்த நடவடிக்கையைப் பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்
