Local

இலங்கை இரண்டாவது நிலையை அடையுமோ என்கிற அச்ச நிலை ஏற்பட்டிருக்கின்றது!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்றவர்கள் 2000 மற்றும் 3000 எண்ணிக்கையை கடந்தால் இலங்கையில் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாரிய சிக்கல்நிலை ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுகிறது.

இதனைத் அந்த சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளரான டாக்டர் நவீன் டி சொய்ஸா தெரிவித்தார்.

‘குறிப்பாக குவைட் நாட்டிலிருந்து வந்த பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கின்ற நிலையில் அங்கிருந்து இன்னும் பலர் நாடு திரும்பிவருகின்றனர்.

தற்போது நாட்டில் கொரோனா கொத்துகொத்தாக நிரம்ப ஆரம்பித்திருப்பதால் இரண்டாவது நிலையை அடையுமோ என்கிற அச்சமும் ஏற்பட்டிருக்கின்றதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading