இலங்கை இளம் யுவதி பிரித்தானியாவில் கொலை!!!
பிரித்தானியா கார்டிப் பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 21ஆம் திகதி காலை பெண் ஒருவர் இரத்த காயங்களுடன் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவிக்குழுவினர், குறித்த பெண் உயிரிழந்தமை உறுதி செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 37 வயதான மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது சவுத் மோர்கன் பிளேஸ் அல்லது சீவோல் வீதி பகுதியில் சாம்பல் நிற ஃபோர்ட் ஃபியஸ்டா (Ford Fiesta) காரைக் கண்டவர்கள், அது பற்றிய தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You must be logged in to post a comment.