Local

இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்த சொத்துக்களை அம்பலப்படுத்திய Pandora Papers

உலகளாவிய ரீதியில் செல்வந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள், சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை Pandora papers அம்பலப்படுத்தியுள்ளது.

இதில் இலங்கை உட்பட 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளின் மறைக்கப்பட்ட சொத்து விபரங்கள் வெளியாகி உள்ளது.

சமகால மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட 35 உலகத் தலைவர்களின் இரகசிய விவகாரங்கள் இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள அரசாங்க அமைச்சர்கள், நீதிபதிகள், மேயர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற 300 க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இரகசிய நிதி குறித்தும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 11.9 மில்லியன் ஆவணங்களை Pandora papers வெளியிட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading