Local

இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளுக்கு சவூதி செல்ல பயணத்தடை!

அதன்படி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து சவுதிக்கு செல்வதற்கு இவ்வாறு பயணத்தடை விதித்துள்ளதாக சவூதி அரேபிய விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய நாடுகளுக்கு பயணித்துள்ள சவூதி அரேபிய பிரஜைகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு 72 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக முன்னதாக கனடா, ஓமான், பிரித்தானியா ஆகிய நாடுகள் ஆசிய நாடுகள் சிலவற்றுக்கு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading