Lead NewsLocal

இதுவரை 100 நாடுகளைச் சேர்ந்தவர்களை சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது சவுதி!

சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, 45 சவூதி பிரஜைகளும்,36 பாகிஸ்தானிய பிரஜைகளும் சவுதி வான்படைத்குச், சொந்தமான விமானம் மூலம் ஜெத்தா நகரில் உள்ள மன்னர் அப்துல்லாஹ் விமான படைத்தளத்திற்கு இன்று காலை (30.04.2023) வந்தடைந்தனர்.

மேலும் ஓமான், பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா மற்றும் நேபாள் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் 52 பேர்கள் ” அல் டிரய்யா” சவுதி அரேபிய கப்பல் மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜித்தா நகரை வந்தடைந்தனர்.

இவர்கள் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ருவாண்டா, காம்பியா, எரித்திரியா, மலாவி, மாசிடோனியா, பிரான்ஸ், இந்தியா, நோர்வே, பாலஸ்தீனம், யமன், அமெரிக்கா, சிரியா, பிலிப்பைன்ஸ், நைஜீரியா, பங்களாதேஷ், ஸ்வீடன், கென்யா, துனிசியா, ஈராக், லிபியா, மொராக்கோ, ஜோர்டான், மொரிட்டானியா தான்சானியா, ஈரான், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, பனாமா, ஈகுவடோர், அயர்லாந்து, கிரீஸ், வியட்நாம், நேபாளம், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, தெற்கு சூடான், சோமாலியா, புர்கினா பாசோ, கோட் டி ஐவரி, கானா, ஜிம்பாப்வே, புருண்டி, மியான்மர், இந்தோனேசியா, தஜிகிஸ்தான் , மங்கோலியா, துருக்கி, இத்தாலி, எத்தியோப்பியா, சாட், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, உகாண்டா, லைபீரியா, நமீபியா, சியரா லியோன், ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம், பெனின், நெதர்லாந்து, எகிப்து, மொரிஷியஸ், ருமேனியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இதில் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த சில ஊழியர்களும் உள்ளடங்குவர்.

அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதில் சவூதி அரேபியா காட்டி வரும் ஆர்வத்தினையும் கெளரவ தூதுவர் அவர்கள்  உறுதிப்படுத்தினார். வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 100 நாடுகளைச் சேர்ந்த 5197 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் (184 சவூதி பிரஜைகள் மற்றும் 5013 ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்).

காலித் ஹமூத் அல்கஹ்தானி
இலங்கைக் குடியரசிக்கான சவூதி அரேபிய தூதுவர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading