Lead News

இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
பேரவையின் 43 வது அமர்வில்
உரையாற்றிய இலங்கை வெளிவிவகார
அமைச்சர் தினேஷ் குணவர்தன ,மனித
உரிமைகள் பேரவையின் 30/1
தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிய
அறிவிப்பை உத்தியோகபூர்வமாக
வெளியிட்டார்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல்
பொறிமுறையின் மூலம் நிலையான
அமைதியை அடைவதற்கான
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உள்நாட்டில்
உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என
தெரிவித்த அவர் ,ஏற்கனவே
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
யதார்த்தமற்றதும் அரசியலமைப்பை
மீறியதும்,நிறைவேற்றமுடியாததுமென
தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மூலமான
மேம்பாடு குறித்தும் சவால்களுக்கு
உள்நாட்டுத் தீர்வு குறித்தும் அமைச்சர்
இங்கு பிரஸ்தாபித்தார்.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அல்லது பாராளுமன்றத்தின்
அனுமதியின்றி இந்த தீர்மானத்தை
முன்னாள் இலங்கை அரசாங்கம்
முன்வைத்தது என்று அவர் கூறினார்.
இதன் விளைவாக, இலங்கை 40/1
தீர்மானம் மற்றும் முந்தைய தீர்மானங்கள்
30/1 மற்றும் 34/1 ஆகியவற்றின் இணை
அனுசரணையை வாபஸ் பெறும் என்று
அமைச்சர் கூறினார்.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான
சட்டங்களை மீறிய விவகாரத்தில்
விசாரணை நடத்திய முன்னைய
ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை
மறுஆய்வு செய்ய இலங்கை
உயர்நீதிமன்ற நீதிபதியின்
தலைமையிலான விசாரணை
ஆணைக்குழுவை நியமிக்கும் என்று
அவர் கூறினார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர்
தினேஷ் குணவர்த்தன, ஐ.நா மனித
உரிமைகள் ஆணையாளரை நாளை
சந்தித்து பேசவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading