Local

இலங்கை கம்பஹாவின் சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்!

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் கடந்த சில மணித்தியாலங்களாக கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் நீர் மானிகளின் நீர் மட்ட பகுப்பாய்வின் படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading