Local

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி விலக தீர்மானம்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குறித்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற போது இருந்த இலங்கை அணியை விட தற்போது சிறந்த அணியொன்று உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading