இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்ய உத்தரவு
நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிபதி கசுன் கஞ்சன தசநாயக்க உத்தரவிட்டார்.
குறித்த உத்தரவை இன்று (28.09.2026) பிறப்பித்திருந்தார்.
தனது பிள்ளைக்குப் பராமரிப்பு கோரி ஒரு பெண் விமானி தாக்கல் செய்த புகாரின் விசாரணையின் போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
29 வயதான சமிக்கா கருணாரத்தின, 2019 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இந்த நிலையில் பெண் ஒருவர் தன்னுடைய 2மாத குழந்தைக்கு சமிக்கா தான் தந்தை எனவும், அவர் அந்த பொறுப்பை ஏற்க மறுப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், “சமிக்கா கருணாரத்தின தான் இந்த குழந்தைக்கு தந்தை, அவர் பொறுப்பை ஏற்க மறுத்ததால், தந்தைவழி பரிசோதனை கோரி நீதிமன்றத்திற்கு வர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழந்தை இலங்கையில் வசிக்க வேண்டும். அவர்தான் தந்தை என்பது எனக்குத் தெரியும். அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனக்கு வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
குறித்த இந்த வழக்க தொடர்பில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரர் சாமிக கருணார நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இன்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளது.

You must be logged in to post a comment.