Local

இலங்கை சந்தையில் வெள்ளைச் சீனிக்கு மீண்டும் தட்டுப்பாடு!

சந்தையில் தற்போது வெள்ளைச் சீனிக்கு மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித் துள்ளனர்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா வரை அதிகரித்துள்ளது.

அத்துடன், சந்தைகளில் விற்பனைக்காக பளுப்பு சீனி மாத்திரமே காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தினால் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித் துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading