இலங்கை சிறைச்சாலையில் மோதல் 2 பேர் பலி 25 பேர் காயம்!!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல்: இருவர் உயிரிழப்பு; 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
====================
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இன்று ஏற்பட்ட கடுமையான மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மோதலில் காயமடைந்த சுமார் 25 கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்த மோதலுக்கான பின்னணி காரணம் அல்லது கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தீவிரத்தன்மை குறித்த விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் சிறைச்சாலா வளாகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.