Local

இலங்கை – சீஷெல்ஸ் ஜனாதிபதிகள் சந்திப்பு! – புதிய இரு உடன்படிக்கைளும் கைச்சாத்து

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று பிற்பகல் அந்த நாட்டின் ஜனாதிபதி டான்னி போர் ஐ சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சீஷெல்ஸ் அரச மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்தப் பேச்சுக்களை அடுத்து. இரண்டு புதிய உடன்படிக்கைகளும், இரு நாட்டு ஜனாதிபதிகளின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading