Local

இலங்கை ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண செலவு வெளியீடு!!

ஜனாதிபதி அநுரகுமாரவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதித் தொகை தொடர்பான விபரங்களை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (15) பாராளுமன்றத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி குறித்த பயணங்களுக்காகவ 14.09 மில்லியன் ரூபாயை செலவழித்துள்ளளார்.

1️⃣கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-17 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட இந்தியப் பயணத்திற்கான செலவு 1.2 மில்லியன் ரூபாய்

2️⃣2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதியன்று சீனப் பயணத்திற்கான செலவு 0.8 மில்லியன் ரூபாய்

3️⃣2025 பெப்ரவரி மாதம் 10-13 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணத்திற்கான செலவு 0.5 மில்லியன் ரூபாய்

4️⃣2025 மே மாதம் 04-06 ஆம் திகதி வரையிலான வியட்நாம் பயணத்திற்கான செலவு 1.9 மில்லியன் ரூபாய்

5️⃣2025 ஜூன் மாதம் 11-13 ஆம் திகதிகளில் மேற்கொண்ட ஜேர்மனி பயணத்திற்கான செலவு 4.0 மில்லியன் ரூபாய்

6️⃣2025 ஜூன் 28-30 ஆம் திகதிகளில் மாலைத்தீவு பயணத்திற்கான செலவு 0.7 மில்லியன் ரூபாய்

7️⃣செப்டம்பர் மாதம் 23-26 ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகள் சபை அமர்வுக்கான அமெரிக்கப் பயணத்திற்கும், அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் 5.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை இன்றைய தினம் (15.11.2025) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading