Local

இலங்கை நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஐவர்?

நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக திட்டமிட்டு பொருளாதார குற்றங்களை இழைத்த குழுவை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அணியை சேர்ந்த சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் சரிது ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களுக்கு வேண்டுமென்றே குற்றம் செய்ததால்தான் இவ்வளவு கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட கூறுகிறது. இந்த நெருக்கடியை உருவாக்கியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். குறித்த அறிக்கையில், ஐவரின் பெயர்கள் தெளிவாக எழுப்பப்பட்டுள்ளன.

டாக்டர் பி.பி. ஜெயசுந்தர,
பேராசிரியர் லக்ஷ்மன்,
எஸ்.ஆர். ஆட்டிகல,
அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அப்போதைய நிதியமைச்சர்
பசில் ராஜபக்ச, இந்த பெயர்கள் அனைத்தும் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை, பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading