Local

இலங்கை பெண்ணுக்கு பூனையால் விமான நிலையத்தில் நேர்ந்த கதி

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் காணாமல் போன தனது பூனையை தேடி 28 மணி நேரமாக அலைந்து திரிந்த இலங்கை பெண், மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

அவிஷ்கா கவுமதி என்ற இலங்கை பெண்ணின் பூனை டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் காணாமல் போயுள்ள நிலையில் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விமான நிலையத்தில் காணாமல் போன தனது செல்லப் பிராணி இன்றி இலங்கை செல்ல மறுத்த பெண், பல மணி நேரம் அதனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

எனினும் பூனை கிடைக்காத நிலையில் இலங்கைக்கு திருப்ப வேண்டிய கட்டாய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை பெண்ணுக்கு பூனையால் நேர்ந்த கதி | Sri Lankan Women S Request To Find Her Cat

இந்நிலையில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தரும்படி டுபாய் வாழ் இலங்கையர்களிடம் சமூக வலைத்தளம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் டுபாய் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் உருக்கமான கோரிக்கை ஒன்றும் குறித்த பெண் முன்வைத்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading