Local

இலங்கை மக்கள் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்!

நாட்டு மக்கள் கடுமையான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றோம். இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பேராசிரியர் அனுரகுமார உத்துமங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேவையான முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதால் நாட்டு மக்கள் பல பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடன்களை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு சிறிலங்கா எடுத்த தீர்மானம் முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சரியான விடயத்தை சரியான நேரத்தில் எடுத்திருக்க வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே பொருளாதார நிபுணர்கள் நாட்டின் நிலைமை தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம்.

அரசியல் காரணங்கள் பேசி அதனை தாமதப்படுத்தினார்கள். குறைந்தப்பட்சம் இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடையலாம். எனினும் அது மிகப்பெரிய தாமதமான முடிவாகவே உள்ளது.- என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading