Local

இலங்கை மக்கள் திண்டாட்டம் அரசியல்வாதிகள் கொண்டாட்டத்தில்!

இலங்கையில் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

நாடாளுமன்றத்தினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட வரும் Genaral,s house பங்களாவில் புத்தாண்டு விடுமுறையில் தங்குவதற்காக அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.

அனைத்து வசதிகளையும் கொண்ட பங்களாவில் 19 அறைகள் உள்ளன. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு நேரத்தில் 3 அறைகளை 3 நாட்களுக்காக ஒதுக்கிக் கொள்ள முடியும்.

நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பங்களா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களாவின் அனைத்து நடவடிக்கைகளும் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை பிரிவினாலேயே நடத்தி செல்லப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading