Local

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவு!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 169 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமான்ன அதிகபட்சமாக 70 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இந்நிலையில், பதிலுக்கு தனது முதல் இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 103 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

அவ்வணி சார்பில் Rahkeem Cornwall அதிகபட்சமாக 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சில் சுரங்க லக்மால் 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதற்கமைய பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. 

341 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதி நாள் ஆட்ட நிறைவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

அதனடிப்படையில் முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading