Local

இலங்கை மீனவர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது

கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களை விடுதலை செய்து மீண்டும் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்களின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் பங்களாதேஷிலுள்ள இலங்கை தூதரகத்துடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் பத்மப்ரிய திசேரா தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading