இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவிக்கு விளக்கமறியல்..!!
முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு
ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!🚨
முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் (CIABOC) கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து அவரை ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் மற்றும் அரச வங்கியிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 1 கோடி ரூபாய் நிதி முறைகேடு தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment.