Local

அனோஜனின் மரண தண்டனையை விரைந்து நடைமுறைப்படுத்துமாறு அரபு ஊடகங்கள் கோரிக்கை..!!

அரபு ஊடகங்களில் விஸ்வரூபம் எடுக்கும் அனோஜன் விவகாரம்!

“மரண தண்டனையை விரைந்து நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை”

சவுதி அரேபியாவில் பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் மத அவமதிப்புக் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அநோஜன் என்ற இலங்கை பிரஜையின் விவகாரம் தற்போது அரபு உலக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பிரபல சர்வதேச ஊடகமான (BBC Arabic & Urdu), Al-Nashra (النشرة), 06 அக்டோபர் 2026 அன்று அதாவது நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில், “பேஸ்புக் பதிவு ஒன்றுக்காக இலங்கை தொழிலாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு” என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது. அநோஜன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட கருத்து இஸ்லாம் மற்றும் நபி முஹம்மது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, சவுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘ஷபாக் நியூஸ்’ (Shafaq News) மற்றும் ‘கல்ஃப் சேனல்ஸ்’ (Gulf Channels) உள்ளிட்ட முன்னணி அரபு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், “இலங்கை இளைஞரின் விவகாரம் குறித்த அரபு நாடுகளின் கவனத்திற்கு மத்தியில், பரவலான விவாதமும் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சவுதி அரசாங்கம் கடுமையான சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருவதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதியின் பிரபல இணைய மன்றமான ‘ஹவாமர்’ (Hawamer) உள்ளிட்ட சமூக வலைத்தளத் தளங்களிலும் அநோஜனின் வழக்கு விவகாரம் வைரலாகியுள்ளது. சவுதி நெட்டிசன்கள் பலரும் அனோஜனுக்கு எதிராகக் கண்டனக் கருத்துகளைப் பதிவிட்டு வருவதுடன், மத அவமதிப்புக்கு எதிரான சட்டத்தின் கீழ் இந்த மரண தண்டனையை விரைந்து நிறைவேற்றுமாறு தீவிர கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

“இலங்கை பிரஜை ஒருவர் அரபு உலகில் எதிர்கொண்டுள்ள இந்தச் சிக்கலான சூழலில், அனோஜனுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுமா என்பது தற்போது பெரும் சவாலாக மாறிவருகிறது.”

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading