World

விரைவில் முடியும் ஈரான் போர்…!ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போதைய சூழலில் ஈரான் நாடு முழுவதும் மற்றும் அதன் இராணுவம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இப்போராட்டம் நிறைவடைந்தவுடன் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விரைவில் முடியும் ஈரான் போர்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல் | Trump Claims War On Iran To End Very Soon

ஈரானிய வான்படை, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டதாகவும் அந்நாட்டின் பொருளாதாரமும் இராணுவமும் மீள முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் உரிமை கோரினார்.

போரின் காரணமாக உலகளவில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள், மோதல் முடிவுக்கு வந்தவுடன் கடுமையாகச் சரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading