Local

இலங்கை முழுவதும் டெல்டா வைரஸ் கொத்தணி பரவும் அபாயம்!

திரிபடைந்த டெல்டா வைரஸின் இணை கொத்தணிகள் நாடு முழுவதும் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் மாறு மிகவும் வேமாக பரவ கூடியதென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா மாறுபாடினை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இரண்டு வாரங்களுக்குள் நாடு மிகவும் மோசமான நிலைக்குள்ளாகும் என ராகம வைத்தியசாலையின் விசேட வைத்தியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

முடிந்தளவு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதே ஒரே தீர்வாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதுவரையில் மக்கள் முடிந்த அளவு வீடுகளில் தங்கிருக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டை முடக்கியிருந்தால் இன்று இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வில்லை என்றால் நாட்டை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் அதில் பயனில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading