இலங்கை வந்தடைந்த இந்திய ஏ அணி
இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்காக இந்திய A அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.
இன்று (5) முற்பகல் இந்திய ஏ அணி இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.
இலங்கை A, இந்தியா A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளன.
இதில் இந்திய A அணியை திலக் வர்மா வழிநடத்தவுள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி தமது முதல் போட்டியில் இலங்கை ‘A ‘ அணியை எதிர்வரும் 9 ஆம் திகதி தம்புள்ளையில் எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை முத்தரப்பு ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, இலங்கை ‘ஏ’ மற்றும் இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இரண்டு பலநாள் (Multi-day) போட்டிகள் காலியில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளுக்கான சிவப்பு பந்து கிரிக்கெட் அணி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.