Local

இலங்கை வரலாற்றில் செலவு கூடிய தேர்தல்!

எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் தான் இலங்கை வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள தேர்தல்களில் மிகவும் செலவு கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர்  சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான செலவை பத்து பில்லியனைத் (ஆயிரம் கோடி) தாண்ட விடாமல் தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் தாங்கள் எடுத்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தாக்கம் காரணமாக பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளைப் பேணி அமுல் செய்யவேண்டி உள்ளது. இதுவே தேர்தல் செலவு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக ஊழியர்களின் சேவை, ஊழியர்களுக்கான முகக் கவசம், கிருமி நீக்கி என்பன உற்பட பல்வேறு சுகாதார வழிகாட்டல்கள் மிகக் கண்டிப்பாகப் பேணப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களுக்கு பொது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரை படி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். அதற்கமைய அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் புறம்பான நேரம் ஒதுக்கப்படும்.

மேலும் வாக்களிப்பு நேரத்தை மாலை ஐந்து மணிவரை நீடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading