Local

இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள்!

இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது அமைந்துள்ளது. ராஜபக்ஷேக்களின் குடும்ப ஆட்சியை, பொதுமக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு முழுமையாக வீழ்த்திய நாள் இது.

மக்கள் ஒன்று சேர்ந்து, எதிர்ப்புகளைப் புறந்தள்ளி ஜனாதிபதியைத் துரத்தியடித்து சாதித்திருக்கும் நாள் இன்றாகும் . இலங்கை வரலாற்றில் மக்களால் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ வரலாற்ரில் பதியப்படுவார்.

அதேசமயம் இலங்கை ஜனாதிபதி பதவி விலகியதாக எழுதப் போகும் சர்வதேச ஊடகங்கள், அவர் மக்களால் துரத்தியடிக்கப்பட்டதையும் கட்டாயம் குறிப்பிடும்.

பொதுமக்களுக்கு நன்மை விளைவிக்காத உலகில் எந்தவொரு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இது ஒரு மிகப் பெரிய பாடமாக வருங்காலங்களில் அமையப்போகின்றது. அரசன் அன்று கொலவான் தெய்வம் நின்று கொல்லும்.

பயங்கரவாதிகள் என கூறி அப்பாவிமக்களை இனவழிப்பு எனும் பெயரில் கொன்று குவித்து தம்மின மக்கள் முன்பு மூன்று தசாப்த போரை முடிவுக்கு கொண்டுவந்ததாக மார்தட்டி பெருமை பேசிய ராஜபக்க்ஷர்கல், இன்று அதேமக்களால் வீதிகளுக்கு துரத்தியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading