Local

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடன் தொகை ஒமானிடம் இருந்து கிடைக்கிறது!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடன் தொகை ஒமானில் இருந்து கிடைக்கிறது என அமைச்சர் கம்மன்பில குறிப்பிட்டார்.

நாட்டில் எந்தவொரு எரிபொருள் கட்டுப்பாடும் இல்லை என கூறிய அவர் டொலர் பற்றாக்குறை பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் உதவியும் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடன் தொகை ஒமானில் இருந்து 3600 மில்லியன் டொலர்கள் கிடைக்கிறது என அவர் கூறினார்.

உலக நாடுகளில் கடன் எடுக்க முடியாத வகையில் எமது நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கடிக்குள்ளாகி இருந்த நிலையில் வரலாற்றில் மிகப்பெரிய கடன் தொகையை ஒமான் நாட்டில் இருந்து எம்மால் பெற முடிந்தது என அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading